#

#
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Friday, September 30, 2016

மின்சாரம் வந்த வரலாறு

      

மின்சாரம் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. பெரும்பான்மையான இயந்திரங்கள் மின்சக்தியாலேயே இயங்குகின்றன. மோட்டார் கார்கள், ரெயில் என்ஜின்கள், விமானங்கள் அனைத்துக்கும் மின்சக்தி தேவையாக இருக்கிறது. எலெக்ட்ரிக் என்ற சொல் கிரேக்க மொழியான எலெக்ட்ரான் என்பதில் இருந்து தோன்றியது. 

‘ஆம்பர்’ எனும் பொருள் துணியின் மீது உராய்ந்தால் அதற்கு சிறு சிறு துண்டு காகிதங்களை கவரும் சக்தி கிடைக்கிறது என்பதை கி.மு. 600ல் கிரேக்க மக்கள் தெரிந்து வைத்திருந்தனர். உண்மையில் மின்சாரத்தை கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் வோல்டா என்பவர் தான். மின்சக்தியை உற்பத்தி செய்யும் எலெக்ட்ரிக் செல்லை முதன் முதலில் அவர் அறிமுகம் செய்தார். எலெக்ட்ரிக் செல் உருவான பிறகு மின்சக்தியில் இருந்து வெப்பசக்தி, ஒளிசக்தி மற்றும் காந்த விளைவுகளை பெறமுடிந்தது.

வோல்டா கண்டுபிடித்த செல்லில் ஒரு துத்தநாக தகடும், ஒரு தாமிரத் தகடும் நீர்த்த கந்தக அமிலத்தில் மூழ்கி இருக்குமாறு வைக்கப்பட்டு இருந்தது. இவற்றுடன் பொருத்தப்பட்டுள்ள கம்பிகளை இணைத்தால் மின்சக்தி கிடைத்தது. பிறகு இந்த செல் பல்வேறு விதங்களில் மேம்படுத்தப்பட்டது.

மின்சாரத்தை பொருத்தவரை 1831-ல் மிகவும் புரட்சிகரமான செயலை செய்தவர் மிக்கேல் பாரடே என்பவர். ஒரு காப்பிடப்பட்ட தாமிரக்கம்பி சுருளின் இடையே காந்தத்தை முன்னும் பின்னும் நகர்த்தினால் மின்சக்தி உற்பத்தி ஆகிறது என்பதை அவர் கண்டு வெளியிட்டார். இதன் அடிப்படையில் மின்சார ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டன. 

1867-ம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் முதன் முதலாக வெற்றிகரமாக டைனமோ என்ற ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மின்சார மோட்டார்களும், டிரான்ஸ் பார்மர்களும் உருவாக்கப்பட்டன. 

19-ம் நூற்றாண்டு இறுதிக்குள் உலகின் சில பகுதிகளில் மின்சார உற்பத்தி தொடங்கப்பட்டு விட்டது. 1858-ல் அமெரிக்கவால் அருவியை பயன்படுத்தி டர்பைன்களை சுழலச் செய்து அதன் மூலம் மின்சக்தியை பெறுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பின் நீர் மின்சாரம், அனல் மின்சாரம் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டன. 

20-ம் நூற்றாண்டில் அணுசக்தி கண்டுபிடிக்கப்பட்ட பின் அணுசக்தியால் மின்சக்தி உற்பத்தி செய்யும் நிலையங்கள் அமைக்கப்பட்டன. தற்சமயம் சூரிய சக்தி மூலம் முழுமையான மின்சக்தியை பெறுவதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். 

Sunday, September 4, 2016

கூகுளின் குரோம் செயலிகளுக்கு ஏற்பட்ட தடை:



                            கூகிளின்  குரோம் ஆப்ஸ்கள் இனி   விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் போன்றவற்றிற்கு கொடுத்து வந்த ஆதரவை நிறுத்த உள்ளது. ஆம் இது 2018 லிருந்து அமலுக்கு வரும் என  கூகுள் குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் அடுத்த வருடத்திலிருந்து குரோமிற்கு சப்போர்ட் செய்யும் ஆப்ஸக்கள்  அனைத்தும் குரோம் பயனர்களால்  மட்டுமே பயன்படுத்த முடியும்.

கூகிள் இது முதல்  , குரோம்  பயன்பாடுகளை     ஹோஸ்ட்டட் ஆப்ஸ்   (hosted apps) மற்றும் பேக்கேஜ்ட் ஆப்ஸ்  (packaged apps)  என இரண்டு வகையாக வகைப்படுத்தி  வழங்கி வருகிறார்கள் இரு வகைகள் உள்ளன. ஹோஸ்ட்டட் ஆப்ஸ்  அதாவது   நிறுவப்பட்ட செயலிகள் , அனைத்து பயனர்களும் இணையத்தில்   உதவியுடன் பெறும்படியும் , பேக்கேஜ்ட் ஆப்ஸ் அதாவது தொகுக்கப்பட்ட செயலிகள்   ஒரு சதவிகிதம்   விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் பயனர்களால் பயன்படுத்தப்பட்டும்  வந்தது.  தற்போது குரோம் ஹோஸ்ட்டட் ஆப்ஸ் மற்றும் பேக்கேஜ்ட் ஆப்ஸ்களுக்கு கொடுத்து வந்த ஆதரவினை அடுத்த 2 வருடங்களுக்கு முற்றிலுமாக தடை செய்யவுள்ளது.   இதனால் அடுத்த இரண்டு வருடங்களுக்கு குரோம் செயலிக்கு  கொடுத்து வந்த சப்போர்ட்  அனைத்தும் நிறுத்தப்படுவதால் பயனர்கள் வேறு ஒரு மாற்று தீர்வை தேடும்  நிலை ஏற்படும்.

Xiaomi Redmi Note 4 ஒரு பார்வை:



சீன  நாட்டினை சேர்ந்த சியோமி நிறுவனம்   ஆறு மாதங்களுக்கு முன்பு Xiaomi Redmi Note 3  சாதனத்தினை தயாரித்து வழங்கியதனை அடுத்து தற்போது Xiaomi Redmi Note 4-யினை அறிமுகப்படுத்தியது.   Xiaomi Redmi Note 3  சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் பெரும் விற்பனையை ஈட்டி தந்தது குறிப்பிடத்தக்கது . அதே போலவே   Xiaomi Redmi Note 4 யும் அதீத விற்பனையை ஈட்டும் என எதிர்பார்த்துள்ளனர்.


Xiaomi Redmi Note 4 ல் அடங்கியுள்ள மிக முக்கிய சிறப்பு அம்சங்கள்:
    •     இந்த ஸ்மார்ட்போன்    deca-core MediaTek helio  X20  ப்ராசசர் மூலம் இயங்குகிறது. இதில் மைக்ரோSD அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய  16/64GB உள்ளடங்கியசேமிப்பு உடன் வருகிறது.
    • Redmi Note 4   ஸ்மார்ட்போனில் MIUI 8 யினை அடிப்படையாக கொண்ட  ஆண்ட்ராய்டு 6.0  Marshmallow  மூலம் இயக்கப்படுகிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் 13MP மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும்   5MP முன் எதிர்கொள்ளும்  கேமராவினையும் கொண்டுள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போனில் 401ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 1080×1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.5   இன்ச்   டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. 
    • ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக  4G LTE, GPRS, 3G, 2G, GPS/A-GPS, ப்ளூடூத் ,     மைக்ரோ-யூஎஸ்பி , ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்  ஆகியவை வழங்குகிறது.
    •  இதில் 151×76.8×8.35mmபரிமாணங்கள் மற்றும் 175கிராம் எடையுடையது. இந்த கைப்பேசியில் 4100mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. 
    •  இது கோல்ட் , சில்வர் மற்றும்  கிரே  ஆகிய மூன்று வண்ண வகைகளில் வருகிறது.
    •  இந்த சாதனம் இரண்டு பதிப்புகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.   அதாவது  16 ஜிபி சேமிப்பு  கொண்ட மாடலின் விலை  சுமார் ரூ 9,000 எனவும் 64GBக்கான கொண்ட மாடலின் விலை சுமார்   ரூ 12,000 எனவும் நிர்ணயித்துள்ளனர்.

Site Search