#

#
Showing posts with label பொதுவானவை. Show all posts
Showing posts with label பொதுவானவை. Show all posts

Sunday, October 16, 2016

ஆவடி நகராட்சியில் விரைவில் குடிநீர் இணைப்புகள்: உயர் நீதிமன்றம் உத்தரவு





ஆவடியைச் சேர்ந்த என்.பாபு கணேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஆவடி நகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டது.
இத்திட்டம் 2 ஆண்டுகளில் முடிந்திருக்க வேண்டும். குறித்த காலத்தில் நிறைவு பெறாததால் 2009-ல் போராட்டங்கள் நடை பெற்றன. அதன்பிறகும், இத்திட்டம் முழுமையாக முடியவில்லை. எனவே, தாமதமாகும் பணிகளை விரைந்து முடித்து குடிநீர் வழங்க நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆவடி நகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘குடிநீர் திட்டத்தின் 95 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. கடந்த ஒரு வாரத்தில் 100 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன’ என்றார்.
‘அனைத்து இணைப்புகளும் எப்போது வழங்கப்படும்?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர், ‘ஒரு மாதத்துக்கு 1,000 குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்’ என்றார்.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ‘‘ஏற்கெனவே குடிநீர் இணைப்பு கேட்ட 18 ஆயிரம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. நீங்கள் சொல்லும் கணக்குப்படி, இவற்றுக்கு இணைப்பு வழங்கவே 18 மாதங்கள் ஆகும். 2 ஆண்டுகளில் முடிக்கவேண்டிய திட்டத்துக்கு ஏற்கெனவே 7 ஆண்டுகள் ஆகிவிட்டன.
எனவே, அனைத்து குடிநீர் இணைப்புகளையும் ஆவடி நகராட்சி நிர்வாகம் விரைந்து வழங்கி, இந்த உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும் தாமதம் ஏற்படாமல் இருக்க வழக்கை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும்’’ என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கை டிசம்பர் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Thursday, October 6, 2016

ஆவடி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1000 லஞ்சம் வாங்கிய அலுவலர் கைது. வீடியோ இணைப்பு




                                                                    நன்றி   புதிய தலைமுறை

Tuesday, October 4, 2016

விவசாயம் செய்யும் ஐடி பெண்

ஆர்கானிக் கடைகள் தெருக்கு தெரு பெருகி வருகின்றன. அப்படி இருந்தும் அங்கு விற்கப்படும் பொருட்களின் விலை குறைந்தபாடில்லை. கேட்டால் எல்லாம் இயற்கை உரம் போட்டு தயாரித்தது என்கிறார்கள். ‘‘எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் பத்தாண்டுகளில் எல்லாமே ஆர்கானிக்காக மாறிவிடும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்போது, சாதாரண கடைகளில் கூட ஆர்கானிக் உணவுப் பொருட்கள் விற்பனைக்கு கிடைக்கும். விலையும் குறையும்...’’ என்று அடித்து கூறுகிறார் ரேகா. இவர் சென்னையில் ஆர்கானிக் ஃபார்ம் மார்க்கெட் என்ற கூட்டுறவு சந்தையை அறிமுகம் செய்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

‘‘எங்க குடும்பம் விவசாய குடும்பம். அப்பா விவசாயி. நான் பொறியியல் பட்டப்படிப்பு படிச்சதே, அப்பாவின் விவசாய சம்பாத்தியத்தில்தான்.  என் கணவரின் குடும்பமும் விவசாய குடும்பம்தான். ரெட்ஹில்ஸ் - ஆவடிக்கு அருகே பாண்டேஷ்வரம் என்ற இடத்தில் எங்களுக்கு நிலம் உள்ளது. நானும் என் கணவரும் பொறியியல் படித்துவிட்டு ஐடி துறையில் வேலை பார்த்து வந்தோம்.

என்னத்தான் விவசாய குடும்பம் என்றாலும், நாங்களும் ரசாயண உரம் கொண்டுதான் விவசாயம் செய்து வந்தோம். அதனால் எங்களுக்கு உடல் நிலை அவ்வப்போது சரியில்லாமல் போனது. அப்போதுதான் நாம் சாப்பிடும் உணவுகளே இதற்கெல்லாம் முக்கிய காரணம் என்று உணர்ந்தோம். இந்த இடத்தில் ஒன்றை சொல்ல வேண்டும். 

ஐ.டி துறையில் நாங்கள் இருவரும் வேலை பார்த்து வந்தாலும் விவசாயத்தை நாங்கள் விடவில்லை...’’ என்று அழுத்தம் திருத்தமாக சொல்லும் ரேகா, ரசாயண உரம் கொண்டு விவசாயம் செய்தால், எந்த பயனும் இல்லை. ஒரு கட்டத்துக்கு பிறகு நிலத்தில் விளைச்சல் பார்க்க முடியாது என்ற எண்ணம் ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்தே தாங்கள் இயற்கை விவசாயத்துக்கு மாறியதாகவும் சொல்கிறார்.‘‘இதற்கு மட்டுமே ஒரு வருடம் ஆனது. பல ஆண்டுகளாக ரசாயணம் கொண்டு விளைவித்த நிலம் என்பதால் மண் வளம் அழிந்திருந்தது. அதை மாற்றி அமைக்க ஓராண்டு ஆனது.

மண் வளமாக மைக்ரோப்ஸ் அவசியம். அதனால் முதலில் தக்கப்பூண்டை கொண்டு மண்ணை உழுது அதை மக்க வைத்தோம். அதன் பிறகு கீரை வகைகளை விளைவித்தோம். கீரைகளுக்கு மண்ணை வளமாக்கும் தன்மை உண்டு. இயற்கை விவசாயத்தை பொறுத்தவரை ஒரே பயிரை விளைவிக்க கூடாது. மாற்று பயிரை விளைவிக்கும் போதும், ஊடு பயிரை செய்யும் போதும்தான் மண்ணின் வளத்தை பாதுகாக்க முடியும். அதாவது, நிலத்தில் நெல் பயிரை விளைவித்தால், மறுபக்கம் அகத்திக் கீரையை பயிர் செய்யலாம். 

அகத்திக் கீரைக்கு பூச்சிகளை தன் வசம் இழுக்கும் தன்மை உண்டு. இதன் மூலம் நெல் பயிரை பாதுகாக்க முடியும். அதே சமயம் அகத்திக் கீரையை 25 நாட்களில் அறுவடை செய்து மறுபடியும் விளைச்சல் செய்யலாம். இதன் வழியாக ஒரு வருமானமும் கிடைக்கும்.அகத்திக் கீரைக்கு அடுத்து உளுந்து போடும் போது அது 60 நாட்களில் விளைச்சல் கொடுக்கும். இப்படி ஒரே நேரத்தில் மூன்று விதமான பயிர்களின் விளைச்சலை பார்க்க முடியும். மண் வளமும் மாறாது. நிலத்தில் தண்ணீர் வளமும் அதிகரிக்கும்...’’ என்று சொன்ன ரேகா, இதன் பிறகு தன்னுடைய அனைத்து நிலங்களையும் இயற்கை விவசாயமாக மாற்றி அமைத்துள்ளார். 

‘‘என் மாமனார் முதலில் ஒரு சிறிய நிலத்தை பயிர் செய்ய கொடுத்தார். அந்த நிலம் விவசாயம் செய்யாமல் சும்மாதான் இருந்தது. நானும் என் கணவரும் அதை மாற்றினோம். விளைச்சலும் நன்றாக கிடைத்தது. எங்களின் சொந்த பயன் பாட்டுக்குப் போக மீதமும் இருந்தது. அதை அருகில் இருக்கும் ஆர்கானிக் கடைகளுக்கு கொடுக்க ஆரம்பித்தோம்.ஆனால், அதற்கான பணம் வந்து சேர ஏழேட்டு மாதங்களானது. அதேபோல் அரிசி, பருப்பு போன்ற பொருட்களை வாங்கிக் கொள்வார்கள். அதை சரியாக பராமரிக்காமல் சில நாட்களுக்கு பின் ‘வண்டு வருகிறது...’ எனதிருப்பிக் கொடுப்பார்கள்.

இதனால் எங்களுக்கு பெரும் பாதிப்புஏற்பட்டது. பொருளும் வீணானது. போக்குவரத்து செலவும் அதிகரித்தது.நாங்கள் பரவாயில்லை. வேறொரு வேலையை பார்த்தபடிதான் விவசாயம் செய்கிறோம். தவிர ஆர்கானிக் கடைகளின் அருகில் வசிக்கிறோம். ஆனால், சிறிய விவசாயிகளின் நிலை? இவர்கள் இப்படி பணம் கொடுக்க இழுத்தடித்தால், அவர்களால் எப்படி அடுத்த விளைச்சலில் கவனம் செலுத்த முடியும்? அதே போல் பொருட்களை திருப்பிக் கொடுக்கும்போது ஏற்படும் நஷ்டத்தை எப்படி தாங்கிக் கொள்வார்கள்?இந்த கேள்விகள் என்னை வட்டமிட்டபடியே இருந்தன. 

இந்த சமயத்தில்தான் அனந்து என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் சென்னை கொட்டி வாக்கத்தில் ஆர்கானிக் கடை ஒன்றை
நிர்வகித்து வருகிறார். பல விவசாயிகளிடம் இருந்து பொருட்களை நேரடியாக வாங்கி அவர் அதனை விற்பனை செய்கிறார். 
இதனால் விவசாயிகள் இடைத்தரகர்கள் தொல்லையின்றி நல்ல வருமானம் பார்த்தார்கள். இதை சரியாக செய்தால் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமின்றி நடுத்தர மக்களுக்கும் ஆர்கானிக் உணவுகள் கிடைக்கும்படி செய்யலாம் என்று தோன்றியது. இதனை அடுத்துதான் ஆர்கானிக் ஃபார்மிங் கூட்டுறவு மார்க்கெட் அமலுக்குவந்தது...’’ என்று சொல்லும் ரேகா, இதை எட்டு பேருடன் இணைந்து தொடங்கியுள்ளார். 

‘‘விவசாயத்தில் முழுமையாக ஈடுபட ஆரம்பித்ததும் வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். என் அப்பா முதலில் திட்டினார். ‘நாங்களே விவசாயத்தில் இருந்து விலகிட்டோம். நீங்க இப்ப என்ன செய்ய போறீங்க...’ என்று கேட்டார். நான் பிடிவாதமாக இருந்தேன். விளைச்சலையும்காண்பித்தேன்.

அனந்து மூலம் இயற்கை விவசாய அமைப்பின் உறுப்பினராக சேர்ந்தேன். அங்குதான் கூட்டுறவு அமைப்புக்கான விதை ஊன்றப்பட்டது. நாங்கள் எட்டு பேர் இணைந்தோம். திருச்சி, சேலம் என்று இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை சென்று சந்தித்தோம். அவர்களின் நிலத்தில் எந்த அளவுக்கு இயற்கை விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள் என்று ஆய்வு செய்தோம்.
இதன் பிறகே அவர்களிடம் இருந்து பொருட்களை வாங்க முடிவு செய்தோம்.

சிலர் இயற்கை விவசாயம் செய்வதாக சான்றிதழ் எல்லாம் காண்பிப்பார்கள். ஒரு சிறு விவசாயியால் அந்த சான்றிதழை அவ்வளவு எளிதாக வாங்க முடியாது. அதே போல் ஒரு சிலர் ரசாயன தொழிற்சாலைக்கு நடுவே உள்ள நிலத்தில் விவசாயம் செய்வார்கள். இப்படித்தான் பலரும் தாங்கள் இயற்கை விவசாயம் செய்து வருவதாக சொல்லி வருகிறார்கள். எனவேதான் நாங்கள் நேரடியாக சென்று பார்வையிடுகிறோம். ஆய்வு செய்கிறோம். எங்களுக்கு திருப்தி ஏற்பட்ட பிறகே அவர்களை எங்கள்
கூட்டுறவு மார்க்கெட்டில் இணைத்துக்கொள்வோம். 

இப்போது எங்க கூட்டுறவில் 16 கடைகள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து கடைகளுக்கும் தேவை இருப்பதால், ஒரு விவசாயின் மொத்த விளைச்சலையும் நாங்க வாங்கிக் கொள்கிறோம். இதனால் அந்த விவசாயிக்கும் கணிசமான லாபம் கிடைக்கிறது.இன்னொரு முக்கியமான விஷயம். விலையை நாங்கள் நிர்ணயிப்பதில்லை. அந்த விவசாயியேதான் தன் பொருட்களுக்கான விலையை நிர்ணயிக்கிறார். எங்கள் நிலத்தில் விளையும் ஜீரகசம்பா அரிசியை கிலோ ரூ.75க்கு விற்கிறோம். 

ஆனால், சில விவசாயிகள் தங்கள் செலவுக் கணக்கை பார்த்து ரூ.100 என்று சொல்வார்கள். அவர்கள் குறிப்பிடும் விலைக்கே வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதம் லாபம் வந்தால் போதும். விவசாயிகள் அல்லது வாடிக்கையாளரின் வயிற்றில் அடித்து சம்பாதிக்க நாங்கள் விரும்பவில்லை...’’ என்ற ரேகா, தங்கள் கடை களில் பிராண்ட் பொருட்கள் விற்கப்படுவதில்லை என்கிறார். 

‘‘ஆர்கானிக் பொருட்களை ஒரு சிலர் பிராண்ட் வைத்து விற்கிறார்கள். அவை உண்மையில் ஆர்கானிக்தானா என்று நமக்கு தெரியாது. நாங்கள் நேரடியாக விவசாயிகளிடம் சென்று வாங்குவதால், அதன் தரத்தை கணக்கி முடியும். வாடிக்கையாளர்களும் நம்பி பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். எனவே பிராண்ட் என்று முத்திரை கொடுக்க விரும்பவில்லை. எங்கள் கடைகளில் எல்லா பொருட்களும் டப்பாக்களில்தான் இருக்கும். எண்ணெய் மற்றும் மாவு பொருட்களை மட்டும்தான் பாக்கெட்டில் அடைத்து விற்கிறோம். 

100 கிராம் முதல் கிலோ கணக்கு வரை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம். நாட்டு காய்கறிகளான வெண்டைக்காய், கத்தரிக்காய், அவரைக்காய் எல்லாம் கிலோ 45 ரூபாய். அதே போல் கேரட், உருளை, பீட்ரூட் எல்லாம் கிலோ 55 ரூபாய் என விற்பனை செய்கிறோம். என்ன இருந்தாலும் ஆர்கானிக் பொருட்கள் மற்ற பொருட்களை விட கொஞ்சம் அதிக விலைதான். காரணம் இயற்கை விவசாயத்தில் எல்லா விவசாயிகளும் ஈடுபடவில்லை. இயற்கை விவசாயிகளால் நம்முடைய தேதவைக்குஏற்ப விளைச்சலை கொடுக்க முடியவில்லை. இயற்கை விவசாயம் என்ற பெயரில் பலர் கலப் படம் செய்து வருகிறார்கள். கலப்படம் செய்யும் விவசாயிகளால், ஒரே நேரத்தில் ஐந்து விதமான பொருட்களை கொடுக்க முடியும். 

ஆனால், சிறிய அளவில் இயற்கை விவசாயம் செய்பவர்களால் அந்த அளவுக்கு விளைச்சலை தர முடியாது. ஒரே காய்கறிகளைதான் அவர்களால் கொடுக்க முடிகிறது. விலை அதிகமாக இருப்பதற்கு இதுவே காரணம்...’’ என்று சொன்னவர் தன்னுடைய பணியை காலை ஐந்த மணிக்கே தொடங்கி விடுகிறாராம்.  ‘‘மொத்தம் 16 கடைகள். 10 விவசாயிகள். அனைவரும் தங்கள் விளைச்சல் காய்கறிகளை வண்டியில் ஏற்றி கோயம்பேட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.

எனவே காலை ஐந்து மணிக்கு நாங்கள் கோயம்பேடு சென்றுவிடுவோம். வண்டி மார்க்கெட்டுக்குள் நுழையும் போதே, அதில் உள்ள லோடுகளை இறக்கி விடுவோம். காரணம் வண்டி மார்க்கெட் உள்ளே சென்றுவிட்டால், அங்கிருந்து மூட்டைகளை எடுத்து வருவது சிரமம். எல்லா விவசாயிகளும் ஒரே ஊரில் வசிக்கவில்லை. எனவே ஒவ்வொரு ஊரில் இருந்தும் ஒவ்வொரு நேரத்துக்கு வண்டி வரும். அதனால் எல்லா வண்டிகளும் வந்த பிறகே காய்கறி மற்றும் பழ லோடுகளை பிரித்து எங்கள் கடைகளுக்கு கொடுப்போம். இதன் பிறகுதான் வியாபாரம். 

கடந்த இரண்டு வருடங்களாக இப்படித்தான் எங்கள் வியாபாரம் நடக்கிறது. எங்கள் கடைகளுக்கு என்று சில கோட்பாடுகள் உண்டு. முன்பே சொன்னபடி பிராண்ட் பொருட்களை விற்க மாட்டோம். ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால், 16 பேரின் ஒப்புதலும் தேவை. பாரம்பரிய உணவு பொருட்களை மட்டுமே விற்பனை செய்கிறோம். அரிசி கூட பாரம்பரிய அரிசிகள்தான். நாங்கள் ஒவ்வொருவரும் மாதம்தோறும் இரண்டு விவசாயிகளை நேரில் சென்று பார்க்கிறோம். அவர்களை இயற்கை விவசாயத்துக்கு மாறச் சொல்கிறோம். கூடவே, இயற்கை விவசாயம் செய்பவர்களையும் சந்தித்து அவர்களது பொருள் எங்கள் தேவைக்கு ஏற்ப உள்ளதா என்று கணித்து எங்களுடன் இணைத்துக் கொள்கிறோம். 

எங்களிடம் வாங்க வருபவர்கள் அவரவர் கையில் பையுடன் வரவேண்டும். அப்படிஇல்லாதவர்களுக்கு நாங்கள் துணி பை தருகிறோம். அதற்கு ரூ.20 கட்டணத்தை தனியாக வசூலிக்கிறோம். அடுத்த முறை வரும் போது அந்த பையை திருப்பி கொடுத்தால் ரூ.20-ஐ திருப்பித் தருகிறோம். மற்றபடி ப்ளாஸ்டிக் பைகளைநாங்கள் பயன்படுத்துவதில்லை.ஒன்று தெரியுமா கார் ஷெட் அல்லது வராண்டாவில்தான் முதலில் விற்க ஆரம்பித்தோம். அதன் பிறகுதான் கடைகளாக மாறியது...’’ என்று சொல்லும் ரேகா, இன்னும் பத்து வருடங்களில் எல்லாமே இயற்கை விவசாயமாக மாறிவிடும் என்கிறார்.

‘‘இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட் களின் விலை மற்ற மார்க்கெட் பொருட்களை விட அதிகம்தான். ஆனால், இந்த விலை வித்தியாசம் கண்டிப்பாக குறையும். எல்லாரும் இயற்கை உணவை சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். அதேபோல் அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும். அப்போதுதான் நம் சமூகம் ஆரோக்கியமாக மாறும்...’’ என்கிறார் அழுத்தம்திருத்தமாக. 

Tuesday, September 6, 2016

இந்தியா வரும் வெளிநாட்டுப் பெண்கள் குட்டை பாவாடை அணியகூடாது..




                  இந்தியா வரும் வெளிநாட்டு பெண்கள் குட்டை பாவாடை அணிய கூடாது என மத்திய சுற்றுழா மற்றும் கலாச்சாரதுரை அமைச்சர் மகேஷ் சர்மா பேசியுள்ளார்.இதன் மூலம் பல உண்மைகளை தன்னை அறியாமலேயே ஒப்புகொண்டுள்ளார்.
     
                         வெளிநாட்டு சுற்றுழாப் பயணிகளுக்கான 1363 ந்ன்ற உதவி எண் சேவையை அறிமுகம் செய்து வைத்த பிறகு மகேஷ் ஷர்மா செய்தியாள்ர்களிடம் பேசியுள்ளார். அப்போது அவர் வெளிநாட்டு சுற்றுழா பயணிகள் விமான நிலையத்தில் வந்து இறங்கும் போது அவர்களுக்கு வைக்கபடும் வரவேற்பு பதாகைகளிலேயே எவற்றை எல்லம் செய்யலாம் எவற்றை எல்லம் செய்யகூடாது என்ற கட்டுபாட்டை குறிப்பிடவேண்டும்.
                           குறிப்பாக அவர்கள் சிறிய நகரங்களுக்கு வந்தால் ,

 1.இரவில் தனியாக வெளியில் சுற்றி திறிய கூடாது.,
2.ஸ்கர்ட் போன்ற குட்டை பாவாடை களை அணியகூடாது.
                 
                          நமது நாட்டிற்கு வருபவர்களுக்கு  ஏன் ஆடை கட்டுபாடு விதிக்க கூடாது.என அவர் கேள்வி எழுப்பினார்.ஆபாச ஆடை அணியும் பெண்கள் ஆண்களின் வக்கிற பார்வைக்கு ஆளாகி அதன் காரணமாக பல அசம்பாவிதங்கள் நடக்கின்றன.இதை நாம் வறவேற்கிறோம் .
                             இது போல ஆபாச ஆடை அணியும் இந்திய பெண்களுக்கும் வக்கிர பார்வை பார்க்கும் ஆண்களால் ஏற்படுமல்லவா? அப்படியானால் அனைத்து பெண்களுக்கும் இந்த கட்டளை பொருந்துமே!
                                இதை உணர்ந்து அதற்கு தகுந்தாற்போல சட்டங்களை இயற்றினால் பெண்களின் மானம் காக்கபடும் .
                                பெண்கள் தமது உடலை  முழுமையாக மூடுவதற்கு ஊக்கபடுத்தவேண்டும் .




                                                                                     -----------நன்றி  உணர்வு-------------

Monday, September 5, 2016

10ம் வகுப்பு வரை படித்துவிட்டு மருத்துவமனையில் பணியாற்றிய 2 போலி டாக்டர்கள் கைது








ஆவடி :  திருநின்றவூர் சி.டி.எச். சாலையில் டாக்டர் தேவா மருத்துவமனை உள்ளது. இதில் போலி டாக்டர்கள் பணியாற்றி வருவதாக திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, சுகாதாரத்துறை இணை இயக்குனர் மோகனன், துணை இயக்குனர் தயாளன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று அங்கு வந்தனர் .அதிகாரிகள் குழுவினர் டாக்டர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதன்பிறகு டாக்டர்களின் சான்றிதழ்களை சரி பார்த்தனர். அப்போது  ஒருவர் போலி டாக்டர் என கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆவடி அடுத்த பட்டாபிராம் குமரன் தெருவை சேர்ந்த விஸ்வேஸ்வர ராவ் (56) என்பதும் 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு 3  மாதமாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் போலி டாக்டர் விஸ்வேஸ்வரராவை திருநின்றவூர் போலீசில் ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விஸ்வேஸ்வரராவை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார்.
திருநின்றவூர் அருகே பாக்கம், சீனிவாசன் நகரை சேர்ந்தவர் குணசேகர் (65). இவரது வீட்டிலேயே மருத்துவமனை நடத்தி, பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இவர் போலி டாக்டர் என, மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.இதையடுத்து, அதிகாரிகள் நேற்று மாலை, குணசேகரன் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர், 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். ‘என தெரிந்தது. இதையடுத்து, குணசேகரனை, திருநின்றவூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.

Sunday, September 4, 2016

கடித்த பாம்பு எதுவென்று தெரிந்து கொண்டால் எளிதாக வைத்தியம்...........



இப்போது தமிழ்நாட்டில் கோடை மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே இயற்கையில் உயிரினங்கள் இந்த மழைநீரை பயன்படுத்திக் கொண்டு தங்கள் சந்ததிகளை பெருக்கம் செய்வது உண்டு. குறிப்பாக கோடை மழையை பயன்படுத்தி ஆங்காங்கே விவசாயம் செழிப்பாக நடக்கும். இந்த கட்டத்தில் தான் பாம்புகளின் நடமாட்டமும் வயலில் இருக்கும். "பாம்பு கடித்தால் சாவு தான்" என்பது தான் பொதுவான கருத்து.
ஆனால் நம்மிடையே பல காலங்களாக இருந்து வந்த நாட்டுப்புற வைத்தியர்கள் இப்போது குறைந்து போனதால் நாட்டு மருந்துகளை பற்றிய விடயங்களும் மறைந்து வருகின்றன. முன்பெல்லாம் பாம்பு கடியை பற்றி அவ்வளவாக பயப்பட மாட்டார்கள். கடித்த பாம்பு எதுவென்று தெரிந்து கொண்டால் எளிதாக வைத்தியம் பார்த்து பிழைத்துக்கொள்ளலாம் என்பதை உறுதியாக நம்புவார்கள்.
பொதுவாக கிராமங்களில் வயல்வரப்புகளில் எலிகளை தேடி வரும் பாம்புகள் அங்கு வேலை செய்யும் விவசாயிகளை கடித்து விடுவதண்டு. என்ன கடித்தது என்றே தெரியாமல் ஏதோ கடித்து விட்டது என்ற எண்ணிக் கொண்டு மந்திரித்தால் சரியாகி விடும் என்று விட்டு விடுபவர்கள் தான் பெரும்பாலும் இறந்து போகிறார்கள். இன்றைக்கு அரசாங்கம் மக்களுக்கான பாம்பு கடி மருந்துகள் கூட பற்றாக்குறையில் இருக்குமளவுக்கு தான் அரசை நடத்துகிறது. நகரங்களில் நாய் கடித்தவர்களின் புள்ளி விவரம் இருக்கும் அளவுக்கு கூட இந்தியாவில் பாம்பு கடித்து இறப்பவர்களின் எண்ணிக்கை சரியாக இல்லை.
பாம்புகளில் ஏராளமான வகைகள் இருக்கின்றன. நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், ஊது சுருட்டை, வளனை, சாரை, தண்ணீர் பாம்பு( டிஸ்கவரி சேனலில் அவ்வப்போது பசிக்கு பியர் கிரில்ஸ் பிடித்து சாப்பிடுவது), கொம்பேறி மூக்கன், மலைப்பாம்பு, கருநாகம், சுண்டக்கருவினை, சாரை என்று பல வகை இருக்கின்றன.ஆனால் இவற்றில் மனிதனை கொல்லக்கூடிய அளவுக்கு விஷமுள்ளவை குறைவே. ஆனால் கடுமையான விஷமுள்ளவை என்று கருநாக வகை பாம்புகளின் கடி தான் ஆபத்தானவை. ஆனாலும் பாம்பு கடித்த அடுத்த நிமிடம் முதலுதவி கிடைத்து விட்டால் கடி பட்ட நபரை பிழைக்க வைத்து விடலாம் என்பது தான் அனுபவத்தில் கண்ட உண்மை.
இது தவிர கடிபட்ட நபர்கள் தன்னை கடித்தது என்ன பாம்பு என்று அடையாளத்தை சரியாக சொல்ல தெரிந்தால் அந்த நபருக்கு நச்சு முறிவு மருந்தை உடனடியாக தேர்வு செய்ய முடியும். பொதுவாக இப்படி அடையாளம் காண தெரியாமல் விடும் போது தரப்படும் தடுப்பு மருந்துகள் ஒருவரின் உயிரை பிழைக்க வைத்து விட்டாலும், கடி பட்ட இடத்தில் இருக்கும் தசை அணுக்கள் செயலற்று போய்விடுகின்றன.
எனவே பாம்பு கடித்து விட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். நோயாளி சுயநினைவுடன் இருக்கும் போதே பாம்பின் அடையாளத்தை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் இருக்கும் சில பாம்பு பிடிக்கும் குழு மக்களுக்கு பாம்புகள் கடித்தால் விஷம் ஏறுவதில்லை என்று சமீபத்தில் டிஸ்கவரி சேனலில் சொல்வதை பார்க்க முடிந்தது. காரணம், காலம் காலமாக இந்த இனத்து மக்கள் பாம்பு பிடிப்பதும், அவர்கள் பாம்பு கடிபடும் போது அது அவர்கள் உடலில் நாளாவட்டத்தில் பாம்பு விஷத்தை முறித்துக்கொள்ளும் அளவு வலிமை பெற்றிருப்பதும் தெரியவந்தது. ஆனால் சாதாரண நபர்கள் பாம்புகளிடம் கடி பட்டால் பதறிவிடுகிறார்கள்.
பாம்பு கடித்ததும் ஐயோ....பாம்பு கடித்து விட்டதே என்று அதிர்ச்சியடைகிறார்கள். இப்படி ஏற்படும் அதிர்ச்சியும் பயமும் தான் அந்த நபரை மரணத்தின் விளிம்புக்கு அழைத்து சென்று விடுகிறது. பாம்பு கடித்து விட்டால் பதறக்கூடாது. இது தான் மிக முக்கியமானது. கடித்த பாம்பு தப்பித்து விட்டாலும் அதன் தோற்றத்தை நினைவில் கொள்ள வேண்டும். அப்போது தான் மருத்துவர்கள் சரியான விஷ முறிவு மருந்தை தேர்வு செய்ய முடியும்.
பொதுவாக கடிபட்ட இடத்தில் பாம்பின் ஒரு பல் பதிந்திருந்தால் அது தோலை மட்டும் தான் பாதித்திருக்கிறது என்றும், இரண்டு பல்லும் பதிந்திருந்தால் அது சதையை பாதிக்கும் என்றும், மூன்று பல் பட்டால் அது எலும்பை பாதிக்கும் என்றும், நான்கு பல் பட்டால் மூளையை பாதிக்கும் என்றும் சொல்வார்கள். பொதுவாக பற்குறி அழுத்தமாக தெரிந்தாலோ, கடிபட்ட இடம் கூர்மையான தீக்கனலில் காட்டிய ஊசியை இறக்கியது போல் எரிச்சலாக இருந்தாலே கடியின் வேகம் அதிகம் என்று தெரிந்து கொள்ளலாம்.
இப்படி இருக்கும் நிலையில் கிராமப்புறங்களில் விரலி மஞ்சளை நெருப்பில் காட்டி அது தணலாக இருக்கும் போது இந்த மஞ்சளின் எரிந்து கொண்டிருக்கும் பகுதியை வைத்து கடிவாயில் அழுத்துவார்கள். இதனால் பாம்பின் நஞ்சு முறிந்து விடும் என்கிறார்கள் அனுபவ வைத்தியர்கள்.
மருத்துவர்கள் இல்லாத பல கிராமங்களில் இன்றும் இது நடைமுறையில் இருக்கிறது. இது தவிர பாம்பு கடி பட்ட நபர்களுக்கு வாழை மட்டையை திருகினால் வரும் சாற்றை எடுத்து குடிக்க கொடுப்பதுண்டு. இந்த வாழைப்பட்டை சாறு பாம்பின் விஷத்தை முறிக்கிறது என்பது கைகண்ட வைத்திய முறை. நாகப்பாம்பு அல்லது கருநாகம் கடித்திருந்தால் கடித்த இடத்தில் ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் ஒரு அங்குல இடைவெளி தென்படும். விரியன் பாம்பு கடித்திருந்தால் இரண்டிற்கும் மேற்பட்ட பற்குறிகள் காணப்படும். நல்ல பாம்பு கடித்தால் ரத்தம் வேகமாக உறையும். மற்ற பாம்புகள் கடித்தால் ரத்தம் உறையாமல் கடி இடத்திலிருந்து ரத்த ஒழுக்கு இருக்கும்.
பாம்பு கடிபட்டவருக்கு ஆமணக்கு இலைகளுடன், ஏழு மிளகை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் பாம்பின் நஞ்சு ஏறாது. மணிக்கு ஒரு தடவை இந்த மருந்தை கொடுத்து வரவேண்டும். இந்த பச்சிலை மருந்து வாந்தியை ஏற்படுத்தி நச்சை நீங்க செய்யும்.
பாம்பு கடித்த நபரை எக்காரணம் கொண்டும் தூங்க விடக்கூடாது. உப்பு, புளி, காரம், எண்ணெய் நீக்கிய வெறும் பச்சரிசியும், பாசிப்பயறும் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட தரவேண்டும். பாம்பு கடி பட்டவர் மூர்ச்சையாகி விட்டால் தும்பை செடியை கசக்கி பிழிந்து சாறு எடுத்து அவரது மூக்கினுள் சிறிது விட வேண்டும். இதனால் மூர்ச்சை தெளிந்து விடும். இது தவிர அருகம் புல்லை வெண்ணெய் போல் அரைத்து கடிபட்ட இடத்தில் வைத்து கட்டினால் பாம்பின் நஞ்சு இறங்கி விடும். அருகம்புல்லின் வாசனை மூர்ச்சையை தெளிய வைக்கும்.
நஞ்சு இறங்கி கடிபட்டவர் ஒரளவு தெளிவான நிலையில் இருந்தால் அவருக்கு வேப்பிலையை வாயில் போட்டு மெல்ல சொல்ல வேண்டும். அப்போது கசப்பு தெரிந்தால் நஞ்சு வெளியாகி விட்டது என்று தெரிந்து கொள்ளலாம். இந்த நிலையில் தும்பை இலை, தும்பை பூ ஆகிய இரண்டையும இடித்து சாற்றை குடிக்க தரவேண்டும். இப்படியான நாட்டு வைத்திய முறையில் பாம்பு கடிபட்டவரை முதலுதவி செய்து காப்பாற்றி விடலாம்.
சில பாம்புகள் கடித்தால் அறிகுறிகள்
நல்ல பாம்பு கடித்தால், கடிபட்ட இடத்தில் வலி இருக்கும். சிலருக்கு வலி தெரியாது. பார்வை மங்கும். கண் இமை சுருங்கும். நாக்கு தடிக்கும். பேச்சு குளறும். வாயில் எச்சில் வடியும். மூச்சு திணறும். நினைவு குறையும்.
கட்டு விரியன் கடித்தால் இந்த அறிகுறியுடன் வயிற்று வலியும் இருக்கும். கண்ணாடி விரியன் கடித்தால் கடிபட்ட இடத்தில் வலி கடுமையாக இருக்கும். கடிபட்ட இடத்தில் வீக்கம், மூச்சுதிணறல், வாந்தி, சோர்வு, சிறுநீர், மலம் ஆகியவற்றுடன் ரத்தம் வரும்.
எனவே பாம்பு கடித்தால் அலட்சியம் வேண்டாம். காரணம், சில நேரங்களில் அது மரணத்தை ஏற்படுத்தாவிட்டாலும் உடலின் முக்கிய பாகங்களில் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தி விடும். உங்கள் கிராமங்கள் அவசர மருத்துவத்திற்கு எட்டாத இடத்தில் இருந்தால் இது போன்ற முதலுதவிகளை உடனே செய்ய அறிவுறுத்துங்கள்.

Site Search