#

#
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Tuesday, September 6, 2016

மனித நேயத்திற்கு எல்லை ஒரு பொருட்டல்ல என நிரூபித்த பஹ்ரைன் பிரதமர்





புவனேஸ்வர்: ஒடிஷாவில் மருத்துவமனையில் உயிரிழந்த தன் மனைவியின் உடலை 10 கி.மீ தூரம் சுமந்து சென்ற ஏழை மனிதருக்கு உதவி செய்ய பஹ்ரைனின் பிரதமர் முன்வந்துள்ளார்.

ஒடிசா மாநிலம் காலாகேண்டி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின நபர் தானா மாஜ்கி என்பவரின் மனைவி அனாங், காசநோய் காரணமாக, கடந்த 23ம் தேதி பவானிபட்னா மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
மனைவியின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வழங்குவதற்கு மருத்துவமனை அதிகாரிகள் மறுத்து விட்டதால், தானா மாஜ்கி தனது மனைவியின் உடலை போர்வையில் சுற்றி தனது தோளில் சுமந்து சென்றார். 10 கி.மீ. தூரம் அவர் சுமந்து சென்ற சம்பவம், சமூக வலைதளங்களில் புகைப்படமாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்செய்தியை கேள்விப்பட்ட பஹ்ரைன் பிரதமர் கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா மனம் வருந்தி உள்ளார். பின் தானா மாஜ்கிக்கு நிதி உதவி செய்ய விரும்பியதாக கூறப்படுகிறது. அந்நாட்டு பிரதமர் அலுவலகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ள
இந்த செய்தியை கேள்விப்பட்டதும் தாம் மிகவும் மன வருத்தமடைந்ததாகவும் அந்த ஏழை மனிதர் தானா மாஜ்கியை தன் நண்பனாக ஏற்றுக்கொண்டு அவரின் குடும்பத்திற்கு நிதி உதவி செய்ய விரும்புவதாகவும் அதற்காக அவரின் முகவரி மற்றும் வங்கி கணக்கு விபரங்களை கொடுக்கும்படி கேட்டு பஹ்ரைனின் பிரதமர் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
பஹ்ரைனின் பிரதமரும் அந்நாட்டின் இளவரசருமான மாண்புமிகு கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா இந்திய தூதரகத்தின் பதிலுக்காக காத்திருக்கிறார். பதில் கிடைத்தவுடன் அந்த ஏழை மனிதருக்கு கடல் கடந்து மனிதநேய உதவி கிடைக்கும்

இந்தியா வரும் வெளிநாட்டுப் பெண்கள் குட்டை பாவாடை அணியகூடாது..




                  இந்தியா வரும் வெளிநாட்டு பெண்கள் குட்டை பாவாடை அணிய கூடாது என மத்திய சுற்றுழா மற்றும் கலாச்சாரதுரை அமைச்சர் மகேஷ் சர்மா பேசியுள்ளார்.இதன் மூலம் பல உண்மைகளை தன்னை அறியாமலேயே ஒப்புகொண்டுள்ளார்.
     
                         வெளிநாட்டு சுற்றுழாப் பயணிகளுக்கான 1363 ந்ன்ற உதவி எண் சேவையை அறிமுகம் செய்து வைத்த பிறகு மகேஷ் ஷர்மா செய்தியாள்ர்களிடம் பேசியுள்ளார். அப்போது அவர் வெளிநாட்டு சுற்றுழா பயணிகள் விமான நிலையத்தில் வந்து இறங்கும் போது அவர்களுக்கு வைக்கபடும் வரவேற்பு பதாகைகளிலேயே எவற்றை எல்லம் செய்யலாம் எவற்றை எல்லம் செய்யகூடாது என்ற கட்டுபாட்டை குறிப்பிடவேண்டும்.
                           குறிப்பாக அவர்கள் சிறிய நகரங்களுக்கு வந்தால் ,

 1.இரவில் தனியாக வெளியில் சுற்றி திறிய கூடாது.,
2.ஸ்கர்ட் போன்ற குட்டை பாவாடை களை அணியகூடாது.
                 
                          நமது நாட்டிற்கு வருபவர்களுக்கு  ஏன் ஆடை கட்டுபாடு விதிக்க கூடாது.என அவர் கேள்வி எழுப்பினார்.ஆபாச ஆடை அணியும் பெண்கள் ஆண்களின் வக்கிற பார்வைக்கு ஆளாகி அதன் காரணமாக பல அசம்பாவிதங்கள் நடக்கின்றன.இதை நாம் வறவேற்கிறோம் .
                             இது போல ஆபாச ஆடை அணியும் இந்திய பெண்களுக்கும் வக்கிர பார்வை பார்க்கும் ஆண்களால் ஏற்படுமல்லவா? அப்படியானால் அனைத்து பெண்களுக்கும் இந்த கட்டளை பொருந்துமே!
                                இதை உணர்ந்து அதற்கு தகுந்தாற்போல சட்டங்களை இயற்றினால் பெண்களின் மானம் காக்கபடும் .
                                பெண்கள் தமது உடலை  முழுமையாக மூடுவதற்கு ஊக்கபடுத்தவேண்டும் .




                                                                                     -----------நன்றி  உணர்வு-------------

8 லட்ச ரூபாய்க்கு சேலை எடுத்து அரசாங்க கணக்கில் சேர்த்த பா .ஜ.க பெண் அமைச்சர் புதிய ஊழல்


மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிதி இரானி, 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சேலைகளை வாங்கி கொண்டு அதற்கான தொகையை துறைரீதியான செலவுகளில் சேர்ப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது, தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்த ஸ்மிதி இரானி தற்போது ஜவுளித்துறையை கவனித்து வருகிறார்.
அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டதிலிருந்து அத்துறையின் செயலாளராக உள்ள ரேஷ்மி வர்மாவுடன் அவர் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் ஜவுளித்துறைக்கு கீழ் இயங்கும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஸ்மிதி இரானி, சில லட்சம் ரூபாய் மிதிப்புள்ள சேலைகளையும், விநாயகர் சிலை ஒன்றையும் வாங்கியுள்ளார்.
இதற்கான பணத்தை கொடுக்காமல், ஜவுளித்துறையின் கணக்கில் இதனை சேர்க்கும்படி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்த துறை செயலாளர் ரேஷ்மி, சொந்த செலவுகளுக்கு அரசு பணம் வழங்க முடியாது எனக் கூறி பணம் வழங்க மறுத்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக பிதரமர் அலுவலகத்திலும் ரேஷ்மி புகார் அளித்தாகவும் கூறப்படுகிறது. இந்த புகாரை முற்றிலுமாக மறுத்துள்ள ஸ்மிருதி, இதனை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும் பிரதமர் அலுவலகத்தில் உள்ள தனக்கு நெருங்கியவர்கள் மூலமாக ரேஷ்மியின் குற்றச்சாட்டு அடங்கிய கோப்புகளை அப்புறப்படுத்தவும் ஸ்மிதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி கோசாலையில் இறந்த 46 ஆயிரம் மாடுகள்: அதிர்சி தகவல்...

           
 
           டெல்லி மாநகராட்சி சார்பில் பசுக்கள் மற்றும் வயதான காளை மாடுகளை பராமரிக்க 5 கோசாலைகள் நடத்தபடுகின்றன.இந்த 5 கோசாலைகள் மூலம் 24 ஆயிரம் மாடுகளை பாதுகாக்க வசதி செய்யபட்டுள்ளது.
              தெற்கு டெல்லி மாநகராட்சியில் செயல்படும் கோசாலைக்கு கடந்த 2015-16 ஆம் ஆண்டில் 3,398 மாடுகள் பாதுகாப்பதற்கு அனுப்பி வைக்கபட்டன. இதே ஆண்டில் அந்த கோசாலையில் 3,185 மாடுகள் உயிரிழந்தன .அதற்கு முந்தைய 2014-215 ஆம் ஆண்டில் 2,974 மாடுகள்: இதில் 3,140 மாடுகள் இறந்து விட்டன .
              மேலும் கிழக்கு டெல்லி மாநகராட்சி கோசாலைக்கு சொந்தமான கோசாலைக்கு 2015 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 190 மாடுகள் அனுப்பபட்டன.இதில் 12 மாடுகள் இறந்துவிட்டன.
               இதில் கடந்த 2011 ம் ஆண்டில் டெல்லி கோசாலைக்கு அனுப்பபட்ட 49 ஆயிரம் மாடுகளில் 46 மாடுகள்  இறந்துவிட்டன.இது டெல்லி மாநகராட்சி தந்துள்ள புள்ளி விபரமாகும்.
                 இது போல் ராஜஸ்தான் கோசாலையில் பராமரிக்கப்பட்டு வந்த 500 மாடுகள் சமீபத்தில் போதிய பராமரிப்பின்றி இறந்துள்ளன .இப்படி பசுவை பாதுகாப்பதற்காக அமைக்கபட்ட கோசாலைகளே பசுக்களின் மரண கூடங்களாக மாறி வரும் நிலையில் பசுவை பாதுகாப்பதாகச் சொல்லி  மனிதர்களை கொள்ளும் பசு நேசர்கள் –பசுக்களை பாதுகாப்தற்காக அரசு சார்பில் அமைக்கபட்ட கோசாலைகள் தோல்வி அடைந்து விட்டன .

           பசுவைவை பாதுகாப்பதாக என்று சொல்லி மனிதர்களை கொன்று குவிக்கிற நிகழ்வுகள் நம்முடைய இந்தியாவில்  பல இடங்களில் நடைபெற்றுகொண்டுவருகிறது. அப்படிபட்ட பசு நேசர்கள் எல்லாம் எங்கே சென்றார்கள் ?????????............

Monday, September 5, 2016

பள்ளிக்கல்வி அமைச்சராக பாண்டியராஜன் பதவியேற்பு


தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக கே.பாண்டியராஜன் பதவியேற்றார்.
தமிழகத்தில் கடந்த மே 16-ம் தேதி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடந்தது. இதில், அதிமுக வெற்றி பெற்று, 6-வது முறையாக ஜெயலலிதா முதல்வரானார். அவ ருடன் 28 அமைச்சர்கள் பதவியேற் றனர். இதையடுத்து, அமைச்சரவை யில் மேலும் 4 பேர் சேர்க்கப் பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சட்டப் பேரவையில் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பால்வளத்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.சண்முகநாதன் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதில், ஆவடி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாண்டியராஜன் அமைச்சரவை யில் சேர்க்கப்பட்டார்.
தற்போது பால்வளத்துறை அமைச்சராக கே.டி.ராஜேந்திர பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். கே.டி.ராஜேந்திர பாலாஜி கவ னித்து வந்த ஊரக தொழில்துறை, பி.பெஞ்சமின் வசம் சென்றது. அவர் கவனித்து வந்த பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச் சரவையில் புதிதாக சேர்க்கப்பட்ட கே.பாண்டியராஜனுக்கு ஒதுக் கப்பட்டுள்ளது.
நேற்று சட்டப் பேரவை நிகழ்ச்சி யில் பங்கேற்க வந்த பாண்டியராஜ னுக்கு சக உறுப்பினர்கள் அவர் அமர்ந்திருக்கும் பகுதிக்கே சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து, நேற்று மாலை 4.35 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளி கையில் புதிய அமைச்சர் பதவி யேற்பு விழா நடந்தது. முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், ஆளுநர் கே.ரோசய்யா, புதிய அமைச்சர் பாண்டியராஜனுக்கு பதவிப் பிரமாணம், ரகசிய காப்புப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து, ஆளுநர், முதல்வருடன் அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், தலை மைச் செயலர் பி.ராமமோகனராவ், தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் உள் ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

சேத்துப்பட்டு பூங்கா போன்று ஆவடியில் உள்ள பருத்திப்பட்டு ஏரியை மாற்ற வேண்டும்



சென்னை : சட்டப்பேரவையில் நேற்று வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று ஆவடி தொகுதி பாண்டியராஜன் (அதிமுக) பேசியதாவது: மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை கொண்டு வர முயற்சி செய்தபோது, தமிழக முதல்வர் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால் தமிழகத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றார். ஆனால், மத்திய அரசு மாற்றம் செய்யாததால் அந்த மசோதாவை அதிமுக எதிர்த்தது. 

சென்னை சேத்துப்பட்டு ஏரி சீரமைக்கப்பட்டு, பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோன்று ஆவடி தொகுதியில் உள்ள பருத்திப்பட்டு ஏரியை மறுசீரமைப்பு செய்து பொழுதுபோக்கு பூங்காவாக மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Site Search