#

#
Showing posts with label உலக செய்திகள். Show all posts
Showing posts with label உலக செய்திகள். Show all posts

Tuesday, September 6, 2016

மனித நேயத்திற்கு எல்லை ஒரு பொருட்டல்ல என நிரூபித்த பஹ்ரைன் பிரதமர்





புவனேஸ்வர்: ஒடிஷாவில் மருத்துவமனையில் உயிரிழந்த தன் மனைவியின் உடலை 10 கி.மீ தூரம் சுமந்து சென்ற ஏழை மனிதருக்கு உதவி செய்ய பஹ்ரைனின் பிரதமர் முன்வந்துள்ளார்.

ஒடிசா மாநிலம் காலாகேண்டி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின நபர் தானா மாஜ்கி என்பவரின் மனைவி அனாங், காசநோய் காரணமாக, கடந்த 23ம் தேதி பவானிபட்னா மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
மனைவியின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வழங்குவதற்கு மருத்துவமனை அதிகாரிகள் மறுத்து விட்டதால், தானா மாஜ்கி தனது மனைவியின் உடலை போர்வையில் சுற்றி தனது தோளில் சுமந்து சென்றார். 10 கி.மீ. தூரம் அவர் சுமந்து சென்ற சம்பவம், சமூக வலைதளங்களில் புகைப்படமாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்செய்தியை கேள்விப்பட்ட பஹ்ரைன் பிரதமர் கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா மனம் வருந்தி உள்ளார். பின் தானா மாஜ்கிக்கு நிதி உதவி செய்ய விரும்பியதாக கூறப்படுகிறது. அந்நாட்டு பிரதமர் அலுவலகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ள
இந்த செய்தியை கேள்விப்பட்டதும் தாம் மிகவும் மன வருத்தமடைந்ததாகவும் அந்த ஏழை மனிதர் தானா மாஜ்கியை தன் நண்பனாக ஏற்றுக்கொண்டு அவரின் குடும்பத்திற்கு நிதி உதவி செய்ய விரும்புவதாகவும் அதற்காக அவரின் முகவரி மற்றும் வங்கி கணக்கு விபரங்களை கொடுக்கும்படி கேட்டு பஹ்ரைனின் பிரதமர் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
பஹ்ரைனின் பிரதமரும் அந்நாட்டின் இளவரசருமான மாண்புமிகு கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா இந்திய தூதரகத்தின் பதிலுக்காக காத்திருக்கிறார். பதில் கிடைத்தவுடன் அந்த ஏழை மனிதருக்கு கடல் கடந்து மனிதநேய உதவி கிடைக்கும்

டொனால்டு ட்ரம்பிற்கு நிர்வாண சிலை :எதிர்ப்பின் உச்சிக்கு சென்ற அமெரிக்கர்கள் !



அமெரிக்கா அதிபர் பரக் ஒபாமாவின் பதவி  காலம் இந்த ஆண்டோடு முடிவடைகிறது .இதனால் வருகிற நவம்பர் 8 ஆம் தேதி அதிபர் தேர்தல் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஒரு முனையில் ஹிலாரியும் ,மற்றொரு முனையில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர் .இதில் ஹிலாரியின் தேர்தல் பிரச்சாரம் அமைதியான முறையிலும் அரசியல் சாசனதிற்கு உட்பட்டும் அமைந்திருக்கிறன . டொனால்டு டிரம்பு பிரச்சாரமோ  அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் ,வன்முறை வித்திடும்  வகையில் அமைந்திருக்கிறது. அதில் குறிப்பிட்ட ஒன்றை சொல்வதாக என்றால் ,

முஸ்லிம்களை விரட்டி அடிப்பேன் :
          நான் அதிபராகிவிட்டால் அமெரிக்காவில் முஸ்லிம்களை அனுமதிக்கமாட்டேன் என்றும் அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம்களை விரட்டி அடிப்பேன் என்றும்  அவர் சொல்வது தான் அவர் பிரச்சாரத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது. இதனால் டொனால்டு டிரம்ப் பிரச்சாரத்திற்கு பல விதமான எதிர்புகள் புகைந்து வருகிறது.
          இதில் என்ன ஆச்சர்யம் என்றால் அரசியல் சாரா அமைப்புகளும் கூட பல  வித்தியாசமான முறையில் டொனால்டு டிரம்பிற்கு எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.
                                                  NO BALLS
                          இதில்  INDECLINE (இண்டிக்லைன்)  என்ற அரசியல் சாரா அமைப்பு ஒன்று வித்தியாசமான முறையில் பல எதிர்புகளை டிரம்பிற்கு தெரிவித்து வருகிறது. அதன் எதிர்பின் உச்சகட்டமாக டிரம்பின் முழு நிர்வாண சிலையை அமெரிக்காவின் பாப்புலரான இடங்களில் வைத்து தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றது அந்த அமைப்பு. இந்த முழு உருவ சிலை மாதிரி நியூயார்க்,லாஸ்ஏஞ்சல்ஸ்,ப்ரான்ஸிஸ்கோ,கிளேவளண்ட் ஆகிய இடங்களில் மக்களின் பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கிறது.


                                                                                                                   ----நன்றி உணர்வு.-------

Site Search