#

#

Tuesday, September 6, 2016

டெல்லி கோசாலையில் இறந்த 46 ஆயிரம் மாடுகள்: அதிர்சி தகவல்...

           
 
           டெல்லி மாநகராட்சி சார்பில் பசுக்கள் மற்றும் வயதான காளை மாடுகளை பராமரிக்க 5 கோசாலைகள் நடத்தபடுகின்றன.இந்த 5 கோசாலைகள் மூலம் 24 ஆயிரம் மாடுகளை பாதுகாக்க வசதி செய்யபட்டுள்ளது.
              தெற்கு டெல்லி மாநகராட்சியில் செயல்படும் கோசாலைக்கு கடந்த 2015-16 ஆம் ஆண்டில் 3,398 மாடுகள் பாதுகாப்பதற்கு அனுப்பி வைக்கபட்டன. இதே ஆண்டில் அந்த கோசாலையில் 3,185 மாடுகள் உயிரிழந்தன .அதற்கு முந்தைய 2014-215 ஆம் ஆண்டில் 2,974 மாடுகள்: இதில் 3,140 மாடுகள் இறந்து விட்டன .
              மேலும் கிழக்கு டெல்லி மாநகராட்சி கோசாலைக்கு சொந்தமான கோசாலைக்கு 2015 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 190 மாடுகள் அனுப்பபட்டன.இதில் 12 மாடுகள் இறந்துவிட்டன.
               இதில் கடந்த 2011 ம் ஆண்டில் டெல்லி கோசாலைக்கு அனுப்பபட்ட 49 ஆயிரம் மாடுகளில் 46 மாடுகள்  இறந்துவிட்டன.இது டெல்லி மாநகராட்சி தந்துள்ள புள்ளி விபரமாகும்.
                 இது போல் ராஜஸ்தான் கோசாலையில் பராமரிக்கப்பட்டு வந்த 500 மாடுகள் சமீபத்தில் போதிய பராமரிப்பின்றி இறந்துள்ளன .இப்படி பசுவை பாதுகாப்பதற்காக அமைக்கபட்ட கோசாலைகளே பசுக்களின் மரண கூடங்களாக மாறி வரும் நிலையில் பசுவை பாதுகாப்பதாகச் சொல்லி  மனிதர்களை கொள்ளும் பசு நேசர்கள் –பசுக்களை பாதுகாப்தற்காக அரசு சார்பில் அமைக்கபட்ட கோசாலைகள் தோல்வி அடைந்து விட்டன .

           பசுவைவை பாதுகாப்பதாக என்று சொல்லி மனிதர்களை கொன்று குவிக்கிற நிகழ்வுகள் நம்முடைய இந்தியாவில்  பல இடங்களில் நடைபெற்றுகொண்டுவருகிறது. அப்படிபட்ட பசு நேசர்கள் எல்லாம் எங்கே சென்றார்கள் ?????????............

0 comments:

Post a Comment

Site Search