#

#

Monday, September 5, 2016

ஆவடியில் இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை







ஆவடி

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

கதவை திறக்கவில்லை

ஆவடியை அடுத்த கோவில்பதாகை புதிய மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் பிரபு(வயது 35). இவர், அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சசிகலா(32). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

வீட்டின் மாடியில் பிரபு தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கீழ் தளத்தில் பிரபுவின் பெற்றோர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை சசிகலாவின் மாமனார் துரை, மாடிக்கு சென்று பார்த்தார். கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் தட்டியும் கதவை திறக்கவில்லை.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் சந்தேகம் அடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது சசிகலா, வீட்டின் உள்ளே மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், சசிகலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆர்.டி.ஓ. விசாரணை

இதற்கிடையில் பட்டாபிராம் காந்தி நகரில் வசிக்கும் சசிகலாவின் தந்தை மூர்த்தி (63) ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர், “சசிகலாவின் கணவர் பிரபு, மாமனார் துரை, மாமியார் செல்வி ஆகியோர் எனது மகளை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதால்தான் அவள் தற்கொலை செய்துகொண்டாள். எனவே பிரபு, துரை, செல்வி ஆகிய 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி இருந்தார்.

இதையடுத்து ஆவடி சரக போலீஸ் உதவி கமிஷனர் குமரேசன் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சசிகலாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார். மேலும் சசிகலாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் இதுபற்றி திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரித்து வருகிறார். 

0 comments:

Post a Comment

Site Search