அமெரிக்கா அதிபர் பரக் ஒபாமாவின் பதவி காலம் இந்த ஆண்டோடு முடிவடைகிறது .இதனால் வருகிற நவம்பர் 8 ஆம் தேதி அதிபர் தேர்தல் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஒரு முனையில் ஹிலாரியும் ,மற்றொரு முனையில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர் .இதில் ஹிலாரியின் தேர்தல் பிரச்சாரம் அமைதியான முறையிலும் அரசியல் சாசனதிற்கு உட்பட்டும் அமைந்திருக்கிறன . டொனால்டு டிரம்பு பிரச்சாரமோ அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் ,வன்முறை வித்திடும் வகையில் அமைந்திருக்கிறது. அதில் குறிப்பிட்ட ஒன்றை சொல்வதாக என்றால் ,
முஸ்லிம்களை விரட்டி அடிப்பேன் :
நான் அதிபராகிவிட்டால் அமெரிக்காவில் முஸ்லிம்களை அனுமதிக்கமாட்டேன் என்றும் அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம்களை விரட்டி அடிப்பேன் என்றும் அவர் சொல்வது தான் அவர் பிரச்சாரத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது. இதனால் டொனால்டு டிரம்ப் பிரச்சாரத்திற்கு பல விதமான எதிர்புகள் புகைந்து வருகிறது.
இதில் என்ன ஆச்சர்யம் என்றால் அரசியல் சாரா அமைப்புகளும் கூட பல வித்தியாசமான முறையில் டொனால்டு டிரம்பிற்கு எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.
NO BALLS
இதில் INDECLINE (இண்டிக்லைன்) என்ற அரசியல் சாரா அமைப்பு ஒன்று வித்தியாசமான முறையில் பல எதிர்புகளை டிரம்பிற்கு தெரிவித்து வருகிறது. அதன் எதிர்பின் உச்சகட்டமாக டிரம்பின் முழு நிர்வாண சிலையை அமெரிக்காவின் பாப்புலரான இடங்களில் வைத்து தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றது அந்த அமைப்பு. இந்த முழு உருவ சிலை மாதிரி நியூயார்க்,லாஸ்ஏஞ்சல்ஸ்,ப்ரான்ஸிஸ்கோ,கிளேவளண்ட் ஆகிய இடங்களில் மக்களின் பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கிறது.
----நன்றி உணர்வு.-------
0 comments:
Post a Comment