புழல், -பட்டாபிராம் பகுதியில் வீடு உடைத்து 11 பவுன் நகைகள் கொள்ளையடித்து தப்பிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆவடி அடுத்த பட்டாபிராம், காசி நகர், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சுகுமார் (55). இவரது மனைவி சசிகலா (52). இவர்கள் கடந்த 18ம் தேதி கேரளாவுக்கு சுற்றுலா சென்றனர். அங்கிருந்து நேற்று மதியம் வீடு திரும்பினர். வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோவை மர்ம ஆசாமிகள் உடைத்து, அதில் வைத்திருந்த 11 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இதுபற்றிய புகாரின் அடிப்படையில், பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
0 comments:
Post a Comment